Saturday, December 8, 2007

तमिल (अब तक सिकतमिल M.A
देश के हर कोने से चेन्नई आने वलून की एक ही कोम्प्लैंत होत है यहाँ कोई हिन्दी नही बोलता
मुझे हिन्दी मे एक शब्द बी लिख खे पन्द्रह साल हो गएँ है , इसको शमा करना . इस रेविएव के ट्रांसलेशन . में टेक्स्ट बुक्स के अलावा कोई भी हिन्दी बुक नही पडा है तो मेरी व्रितिंग स्टाइल
திரை படம் : கற்றது தமிழ் ! என் எண்ணங்கள்
நான் தற்கொலை செஞ்சுகர்துக்கான காரணத்தை சொன்னா நீ சிரிப்ப ஆனந்தி . தமிழ் நாட்டில் தமிழ் படிச்சவன் எப்படி உயிர் வாழ முடியும் நீயே சொல்லு ? கண்ணாடி முன் புகை பிடித்து கொண்டு நடிகர் ஜீவா தோன்றுகிறார் . சமீபத்திய தமிழ் திரைப்படங்களில் கதாநாயகர் வரும் அறிமுக காட்சிகளில் இது மிகவும் வேறுபட்ட மற்றும் மனதில் வலியை ஏற்படுத்தும் ஒரு காட்சி இது .
கற்றது தமிழ் ! தமிழ் எம். ஏ . திரைபடத்தின் பெயரை கேட்கும் போதே தமிழக அரசின் பொழுது போக்கு வரி சலுகையை மனதில் வைத்து எடுக்க பாட படமோ என தோன்றலாம் . ஆனால் சில அழகிய தமிழ் மகன்களை போல் அல்லாமல் திரை படத்தின் இயக்குனர் ராம் தமிழகத்தில் தமிழ் பற்றி உண்மையிலேயே சில ஆழமான கேள்விகளை எழுப்புகிறார் .
ஒரு காவல் துறை அதிகாரியின் அட்டுழியத்தினால் தான் தமிழ் ஆசிரியராக பணி புரியும் பள்ளியின் முன்பாகவே , மாணவர்கள் முன்னிலையில் காவலர்களால் கைது செய்யப்படுகிறார் கதா நாயகர் பிரபாகர் . காவலர்களின் பொய் வழக்குகளில் இருந்து தப்பித்து போகும் பொழுது ரயில் நிலைய அதிகாரி ஒருவரையும் , ரயிலில் ஒரு ரயில் பாது காவலரையும் கொன்று விடுகிறார் . அதற்கு பிறகு ஆந்திராவிற்கு ஓடும் பிரபாகர் அங்கு சில சிவ பக்தர்களுடன் சேர்ந்து போதை பொருள் பழகிறார் . தன்னை சிவனாக கருதி கொண்டு எல்லா உயிர்களையும் எடுக்கும் அதிகாரம் இருப்பதாக நினைக்கிறார் . இந்த கட்டத்தில் அவரும் இன்னொருவரும் ஒரு நதிக்கரையில் ஒரு கோவிலின் அருகே புரியும் நடனம் அற்புதம் ! இப்பொழுது முன்பை விட அதிகமான தலை முடியுடனும் , தாடியுடனும் தோன்றும் பிரபாகர் தான் ௨௨ பெயரை கொன்று விட்டதாக பிரபாகர் கூறுகிறார், .ஆனால் எனக்கு ஒரே குழப்பம் படம் எங்கே போகின்றது என்று .
அதன் பிறகு கருணாசிடம் தன் கடந்த கால வாழ்க்கையை பற்றி சொல் துவங்குகிறார். தன் நண்பன் புலியை காட்டுவதாக கூறி தன் பள்ளி தோழி ஆனந்தியை காட்டிற்கு அழைத்து செல்கிறார் . தமிழும் புலியும் பிரபாகரும் எங்கோ இடிக்கிறதே :) அதன் பிறகு கையில் காகித விளக்குகளை ஏந்தி பிரபாகரும் ஆனந்தியும் விளையாடும் காட்சியில் ஆனந்தி மேல் பற்று கொள்கிறார் பிரபாகர் . இளம் பருவத்தில் வரும் காதல் மிகவும் சுகமானது, அதை ஒளி பதிவாளர் இருவரின் சட்டைகளின் மீதும் காகித விளக்கின் வழியாக பெயர்களை ஓட விடுவதின் மூலமாக அற்புதமாக பதிவு செய்கிறார்
இதன் பிறகு வாழ்கையில் முதல் மரணத்தை தன் நாய் குட்டி டோனி ரயிலில் அடிபட்டு இறப்பதின் மூலமாக சந்திக்கிறார் பிரபாகர் . அவரும் ஆனந்தியும் நாய் குட்டியை காப்பாற்ற ஒரு irootaana குகைப்பாதை நோக்கி ஓடும் பொழுது ஒருவரால் தடுக்க படுகின்றனர். ஒரு நாய் குட்டியின் இழப்பு ஒரு கை குழந்தையின் இறப்பை போல என சொல்லி இயக்குனர், என் மடியில் உயிர் துறந்த என் செல்ல நாய் குட்டி அல்போவின் நினைவு படுத்தி என் கண்களை கலங்க வைத்து விட்டார் . இதன் பிறகு பிரபாகர் தனது தாயாரையும் தாத்தா பாட்டியையும் ஒரு சாலை விபத்தில் இழக்கிறார் பிரபாகர் . தந்தை ராணுவத்தில் பணி புரிவதால் அவரை ஒரு பள்ளி விடுதியில் சேர்த்து விடுகிறார் . ஆனந்தியையும் இதனால் பிரிகிறார் .
பள்ளியில் சந்திக்கும் தமிழ் ஆசிரியர் பிரபாவிற்கு மிகவும் பிடித்து போகிறார் . தன் தாயரி இழந்து ,தந்தையை பிரிந்து மன நிலை பாதிக்கப்படும் பிரபாவிற்கு தமிழ் ஆசிரியர் ,ஆசானாக மட்டும் அல்லாமல் ஒரு வளர்ப்பு தந்தையாகவும் இருக்கிறார் . தமிழகத்தில் இருக்கும் எல்லா தமிழ் ஆசிரியர்களுக்கும் இது ஒரு உதாரணம் . எல்லா காயங்களில் இருந்தும் பிரபாகரனை மீது எடுக்கும் தமிழ் ஐயா அவனை தமிழ் படிக்க வைக்க விரும்பிகிறார் . ஆனால் பிரபாவை மரணம் எங்கும் பின் தொடர்கிறது . தமிழ் ஐயா ஒரு பெரும் சாலை விபத்தில் உயிரை இழக்கிறார் , ஆனால் adhaan மூலமாக ஆனந்தியை மீண்டும் சந்திக்கிறார் பிரபாகர் . adhan
தன் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் வழி காட்டுவதற்கு யாருமே இல்லாமல் தவிக்கும் பிரபாகர் தன் தமிழ் ஐயா விருப்பம் போலவே தமிழ் இள நிலை பட்டதாரி பிரிவில் சேர்கிறார் . பள்ளியில் மிகவும் அதிகமான மதிபெண்கள் எடுத்தும் தமிழை பாட பிரிவாக எடுப்பதால் அவர் தலைமை ஆசிரியரிடமும் பிற மாணவர்களிடம் படும் அவமானம் தமிழ் கூறும் நல்லுலகில் இருக்கும் ஒவ்வொரு தமிழனின் மனதையும் ரணமாக்கும் . தெரிந்தோ தெரியாமலோ நாம் அனைவரும் இதற்கு காரணம் என எண்ணும் பொழுது என் மனம் தடுமாறுகின்றது . நம் மக்களுக்கு நாம் எத்தகைய சமுதாஇயத்தை விட்டு செல்கிறோம் ?
பிரபாகரனுக்கும் ஆனந்திக்கும் இடையே தோன்றும் காதல் மென்மை ,மேன்மை. ஆனந்தியை தேடி மகாராஷ்டராவிற்கு செல்லும் பயணத்தின் பொது வரும் யுவனின் இசையில் இசை ஞானியின் பறவையே எங்கு இருகிறாய் பாடல் நம் உள்ளதை விட்டு நீங்க மருகிரன்றது . ஆனந்தி 'நெஜம்மாவா சொல்றே' ? என்று கேட்கும் ஒவ்வொரு முறையும் ஆமாம் என்று பிரபா சொல்லும் பொழுதும் என் udhadugal என்னை மீறி புன்னகைத்து கொண்டிருந்தன.
ஆனால் பிரபாவிற்கு இதுவும் கொடுத்து வைக்க வில்லை , ஆனந்தி அவர் மாமாவால் மும்பைக்கு அழைத்து செல்லபடுகிறார் . சென்னையில் சரியான வேலை இல்லாமல் தன் காதலியும் இல்லாமல் தவிக்கும் பிரபா தனக்கு சரியான வேலை கிடைகாதற்கு தான் தமிழ் பயின்றதே காரணம் என எண்ணுகிறார் . மென் துறையில் வேலை செய்யும் தன் நண்பனும் , தொலை பேசி ஒபேரடோர் (BPO employee !) தன்னை விட பல மடங்கு சம்பாதிபதை நம்ப மறுக்கிறார் . இந்த காட்சி சமீபத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் நான் எனது ஊதியத்தை பற்றி கூறிய போது அவர் வெளி பற்றிய வியப்பை நினைவூட்டியது . இதை போல பல்வேறு நிகழ்ச்சிகளால் பதிக்கப்படும் பிரபா ஒரு தொடர் கொலை காரர் (Serial Killer) ஆகிறார் . முடிவில் தனக்கு அநிதி இழைத்த காவல் அதிகாரியை கொன்று விட்டு வரும் பொழுது தன் காதலி ஆனந்தியை ஒரு பாலியல் தொழிலாளியாக சந்திக்கிறார் . எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்பட கூடாத நிலைமை அது . முடிவில் தான் செய்த எல்லா கொலைகள் பற்றியும் தன் வாக்கு மூலத்தை ஒரு ஒளி நாடாவில் பதிவு செய்து சன் தொலை காட்சியில் ஒளி பரபுகிறார் .
ஆனந்தியுடன் இனி நிம்மதியாக வாழ எண்ணும் அவரை மரணம் மீண்டும் தொடர்கிறது . காவல் துறையால் தொடரப்படும் அவர் , தன் நாய் டோனி இறந்த அதே குகை பாதை அருகே வருகிறார் . தப்பிக்க வேறு வழி ஏதும் தெரியாத போது , ஆனந்தி , பிரபா விடம் வா டோநீயை காபற்றலாம் என்று கூறுகிறார் . இருவரும் அந்த குகையை நோக்கி கையோடு கை சேர்த்து ஓடுகின்றனர் . முன் ஒரு காட்சியில் அவர்களை தடுத்த நபர் அவர்களை விடுவதாகவும் , ரயில் அவர்கள் மீது எருவதாகவும் , இருவரும் குழந்தைகளாக குகையின் மற்றொரு வாயில் வழியாக வெளி வருகின்றதகவும் படம் நிறைவடைகின்றது .
இயக்குனர் மொழி பற்றையும் கம்யுனிச சித்தந்தகளையும் சேர்த்து ஒரு படம் செய்திருகிரரோ என சில சமயம் தோன்றினாலும் படத்தின் காதலும், ஒரு மனிதனுக்கு விதி செய்யும் வினைகளும் அதை மீறி படத்தை தாங்குகிறன . பிரபாகராக ஜீவாவும் , ஆனந்தியாக அஞ்சலியும் மிக , இயல்பாக நடிதிருகினறனர் . அஞ்சலியை பார்த்ததில் ஒரு தமிழ் முகத்தை கதாநாயகியாக தமிழ் திரைபடத்தில் நீண்ட நாளைக்கு பிறகு பார்த்த மகிழ்ச்சி . எந்த சோகத்திலும் ஜீவாவை மது அருந்தி விட்டு குத்து பாட்டிற்கு ஆட விடாத இயக்குனருக்கு மிக்க நன்றி .
பி.கு :நான் தமிழில் பாத்து வரிக்கும் மேல் எழுதி ஆண்டுகள் பலவாகின்றன எனவே எனது எண்ணங்களை கணினியில் தமிழில் எழுத உதவிய கூகிள் இணைய தளத்திற்கு http://www.google.com/transliterate/indic/Tamil என் முதற்கண் நன்றி . பிழைகளை மன்னிக்கவும் !
கற்றது தமிழ் ! ஒரு ரசிகனின் எண்ணங்கள்